கொழுந்துவிட்டு எரிந்த தீ..! 60 ஆடுக்குட்டிகள் கருகி பரிதாப பலி..!

By Manikandan S R S  |  First Published Mar 16, 2020, 11:27 AM IST

சம்பவத்தன்றும் பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற சாந்தகுமார், குட்டிகளை கூண்டில் அடைத்து சென்றுள்ளார். அப்போது வயல்வெளியில் இருந்த புற்களில் திடீரென தீப்பிடித்துள்ளது. மளமளவென பிடித்த தீ ஆட்டுக் கூண்டுகளுக்கும் பற்றியது. இதில் கூண்டு முழுவதும் பற்றி எரியவே வெப்பம் தாளாமல் ஆடுகள் கத்தியுள்ளன. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி  60 ஆட்டுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. 


திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் சாந்தகுமார். விவசாயியான இவர் ஆட்டு பண்ணை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது பண்ணையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் இருக்கிறது. தினமும் பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு செல்வது சாந்தகுமாரின் வழக்கம். இரவில் வயல்வெளிகளில் கிடை அமைத்து ஆடுகளை பாதுகாத்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

பெரிய ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது குட்டிகளை பனைஓலை கூரையுடன் தயாரிக்கப்பட்டுள்ள கூண்டுகளில் அடைத்து செல்வார் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற சாந்தகுமார், குட்டிகளை கூண்டில் அடைத்து சென்றுள்ளார். அப்போது வயல்வெளியில் இருந்த புற்களில் திடீரென தீப்பிடித்துள்ளது. மளமளவென பிடித்த தீ ஆட்டுக் கூண்டுகளுக்கும் பற்றியது. இதில் கூண்டு முழுவதும் பற்றி எரியவே வெப்பம் தாளாமல் ஆடுகள் கத்தியுள்ளன. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி  60 ஆட்டுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன.

போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..! முதன்முறையாக காவல்துறை அதிரடி..!

ஆடுகள் உயிரிழந்து கிடந்தது கண்டு உரிமையாளர் கதறி துடித்தார். உயிரிழந்த ஆட்டுகுட்டிகளின் மதிப்பு ரூ.1.25 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!