செய்துங்கநல்லூர் அருகே அவர்கள் வந்தபோது அதே சாலையில் வேன் ஒன்று வந்துள்ளது. அங்கிருக்கும் பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வேன் ஓட்டுனர் எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென்று வேனை திருப்பி இருக்கிறார். அதை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் எதிர்பார்க்காததால், வேன் மீது பயங்கரமாக மோதினர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மகன் மணிகண்டன்(32). ஏரல் அருகே இருக்கும் மூக்குப்பீறியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். மணிகண்டனும் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த அவினேஷ் வரதன்(25) என்பவரும் உறவினர்கள். அவினேஷ் பாலிடெக்னிக் படிப்பு முடித்து விட்டு புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.
திருச்செந்தூரில் இருக்கும் உறவினர்களை பார்ப்பதற்காக இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். செய்துங்கநல்லூர் அருகே அவர்கள் வந்தபோது அதே சாலையில் வேன் ஒன்று வந்துள்ளது. அங்கிருக்கும் பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போடுவதற்காக வேன் ஓட்டுனர் எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென்று வேனை திருப்பி இருக்கிறார். அதை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் எதிர்பார்க்காததால், வேன் மீது பயங்கரமாக மோதினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவினேஷ் வரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். விபத்து நிகழ்ந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..! முதன்முறையாக காவல்துறை அதிரடி..!
அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.