பிறக்கும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரோட வந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் அனைவரும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவில் உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ள தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போதே குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் கல்லறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடக்கம் செய்வதற்கு முன்பு குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உயிருடன் இருந்த சிசு மீண்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று 11 மணி அளவில் இருந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரவு வரை குழந்தையின் இதயத்துடிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார். குழந்தை 6 மாதத்திலேயே குறைபிரசவத்தில் பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே எடையிருந்ததாகவும் எனவே தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார். லும் கவனக்குறைவாக செயல்பட்ட 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு மேமோ வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.