தமிழ்நாட்டில் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் பத்து லட்சம் பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் பத்து லட்சம் பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மகக்ள் ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம் சூட்டியுள்ளார். மாநிலம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகர் மற்றும் இருமாநில எல்லையான குமுளி பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
undefined
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை 62 சதவீதம் பேர் முதல் தவனை தடுப்பூசி போட்டுள்ளதாகவும், 20 சதவீதம் பேர் இரண்டு டோஸ் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். முதல் மூன்று மெகா தடுப்பூசி முகாம்களை போல இன்றைய தினமும் இல்லை எட்டி வெற்றி பெறுவோம். இன்று ஒரே நாளில் பத்து லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதை போலவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய விழிப்புணர்வே இந்த வெற்றிக்கு காரணம். மேலும், தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அருகே உள்ள மாவட்ட மருத்துவமனைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். என்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.