ஏரி குளம் எல்லாம் ரொம்பி போய் இருக்கு.. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. தேனி மாவட்ட ஆட்சியர்..!

By vinoth kumar  |  First Published Nov 24, 2023, 11:07 AM IST

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்பியுள்ளது.


கனமழையால் அனைத்து பகுதிகளிலும் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்பியுள்ளது. வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை மற்றும் வைகை அணை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.

இதையும் படிங்க;- ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது திடீர் மாரடைப்பு! சென்னையில் இளம் பெண் மருத்துவர் பலி!இவர் யார் மகள் தெரியுமா?

மேலும், பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546- 261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

click me!