Breaking: சவுக்கு சங்கரை விடாது துரத்தும் தமிழக அரசு? மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு

By Velmurugan s  |  First Published Aug 12, 2024, 10:28 PM IST

தேனியில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் சவுக்க சங்கரை காவல் துறையிர் தேனியில் கைது செய்தனர். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரிடம் கஞ்சா இருந்ததாக அப்போது புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தீக்குழியில் விழுந்த சிறுவன் படுகாயம்; தந்தை இழுத்து சென்றபோது சோகம்

Tap to resize

Latest Videos

undefined

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்ந்ததைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் குண்ட சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

5 வயது சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்; வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து பலி

இந்நிலையில் தற்போது தேனியில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல் துறையினர் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!