தேனி மாவட்டத்தில் கோவிலில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்திய நபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ராயப்பன் பட்டியைச் சேர்ந்தவர் சின்னன். கூலித் தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே ஆனைமலையன்பட்டி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சின்னன் வழிபாடு நடத்துவதற்காகச் சென்றுள்ளார்.
அவன் கூட பழகாதனு சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியை கொன்று தொங்விட்ட அண்ணன்
undefined
இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கேனுடன் சென்ற சின்னன் அதனை அருகிலேயே வைத்துக் கொண்டு கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தீபம் எதிர்பாராத விதமாக சின்னன் வைத்திருந்த பெட்ரோல் கேனில் பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் நெருப்பு சின்னன் மீதும் பரவவே தீயில் கருகி அருகிலேயே சுருண்டு விழுந்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! நிலுவையில் உள்ள மொத்த சம்பளத்தையும் வழங்க உத்தரவு
அருகில் யாரும் இல்லாததால் சின்னன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவ்வழியா சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை அடையாளம் கண்டு ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இராயப்பன்பட்டி காவல் துறையினர் சின்னனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட வந்த நபர் கோவில் முன்பாக தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.