தேனியில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதி.. மாவட்ட வாரியாக முழு பட்டியல்

By karthikeyan VFirst Published Apr 8, 2020, 7:02 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 738ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக  பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 690லிருந்து 738ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 29 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று தீவிரமாக இருந்த நிலையில், தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, தேனி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கையை பார்ப்போம்.

சென்னை - 156

கோவை - 60

திண்டுக்கல் - 46

நெல்லை - 40

தேனி - 39

திருச்சி - 36

நாமக்கல் - 33

ஈரோடு - 32

ராணிப்பேட்டை - 27

மதுரை, செங்கல்பட்டு - 24

கரூர் - 23

திருப்பூர் - 22

விழுப்புரம் - 20

தூத்துக்குடி - 17

சேலம், கடலூர், திருவள்ளூர் - 13

திருவாரூர் - 12

நாகை, விருதுநகர், திருப்பத்தூர், தஞ்சாவூர் - 11

திருவண்ணாமலை - 9

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேலூர் - 6

சிவகங்கை - 5

நீலகிரி - 4

ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, தென்காசி - 2

பெரம்பலூர், அரியலூர் - 1
 

click me!