கும்பகோணத்தில் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரொனோ தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் படையெடுப்பதால் பல மாவட்டங்களில் மருந்து இல்லாமல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசியை கண்டாலே தெறித்து ஓடிய தமிழக மக்கள் தற்போது நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக லெட்சுமி நாராயண புரம் பகுதியை சேர்ந்த வள்ளிகண்ணு (40) என்று பெண் காலை 7 மணி முதல் வரிசையில் நின்றுள்ளார்.
நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் அந்த பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.