பாபநாசத்தில் திருமண கறி விருந்தில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசத்தில் திருமண கறி விருந்தில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலத்துறையை சேர்ந்த ராஜா என்பவரது திருமணம் கடந்த 14ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 17ம் தேதி கறி விருந்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
undefined
இதனையடுத்து, அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் மாப்பிள்ளை ராஜா உட்பட 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அன்னை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பிரான்ஸ் மேரி என்ற நபரை மட்டும் ஒன்றரை வயது கைகுழந்தை வைத்திருப்பதால் அவரை பாபநாசம் அரசு பொது மருத்துவ மனையில் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத் துறை மூலம் நடத்தப்பட்டது. பாபநாசம் பேரூராட்சியின் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் தெரு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுண்ணாம்பு பவுடர் அடித்து சுத்தம் செய்தனர்.