தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு கைலி, நைட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை என கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையால் சர்ச்சை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் நபர்கள் கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை ஆகிய அணிந்து வர கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க;- வெயிலால் ஸ்கூலுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவிக்கிறாங்க.. உடனே எக்ஸாம் நடத்தி லீவு விடுங்க.. அன்புமணி.!
இதனை மீறி கைலி, நைட்டி, அரைக்கால் சட்டை அணிந்து வருபவர்களை அலுவலகத்தில் விட மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வாங்க வந்த தந்தை ஒருவர் கைலி அணிந்து வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- விதைப் பையை நசுக்கி சித்ரவதை.. இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்.. கொதிக்கும் வைகோ..!