தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சந்திப்பில் 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர்.
இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுகவினர் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்கள் யார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.