தஞ்சாவூர் அருகே மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் தேனீர் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
தஞ்சையில் கடன் தொல்லை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே மேலவெளி ஊராட்சிக்கு உள்பட்ட மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் தேனீர் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வந்தது. அதில், ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வினோத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்த போது குடும்பத்துடன் ராஜா தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, 3 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜாவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும், மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. குடும்பத்துடன் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.