தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமாருக்கும், நெடுந்துறையை சேர்ந்த லட்சுமி என்பவருக்கம் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2019-ம் ஆண்டு பாபநாசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 2வது முறை கர்ப்பமான லட்சுமி, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிரசவத்திற்காக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஊசியை வயிற்றுக்குள் வைத்து தைத்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்தவர் விஜயகுமாருக்கும், நெடுந்துறையை சேர்ந்த லட்சுமி என்பவருக்கம் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2019-ம் ஆண்டு பாபநாசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 2வது முறை கர்ப்பமான லட்சுமி, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பிரசவத்திற்காக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- நீதிமன்ற தீர்ப்பை எண்ணி கலங்காதீங்க.. பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது.. ராமதாஸ் சபதம்
அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், லட்சுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட போது அவருடைய வயிற்றில் உடைந்து போன ஊசியின் பாகம் இருப்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 18ம் தேதி இந்த தகவல் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தெரியவந்து ஆம்புலன்சை அனுப்பி வலுக்கட்டாயமாக லட்சுமியை அழைத்துச் சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க;- அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? ஓபிஎஸ் கூறிய பதில் என்ன தெரியுமா?
இதனையடுத்து, லட்சுமி கடந்த 22ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த லட்சுமியின் உடலைப் பெறுவதற்கு முன்பு மருத்துவர்கள் வலுக்கட்டாயமாக லட்சுமியின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் நீதிமன்றம் செல்லமாட்டோம் என எழுதி வாங்கி கொண்ட பிறகுதான் உடலை ஒப்படைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!
இதுதொடர்பாக லட்சுமியின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில், என் மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் உயிரிழந்துவிட்டார். இதற்கு நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதாகத் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், கோயிலுக்கு வழங்கப்படும் தொகையை, மருத்துவமனைக்கு கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் நடிகை ஜோதிகா பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது. நடிகை ஜோதிகா பேசியது போல், பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு, பாதுகாப்பை மீறி குழந்தை கடத்தல் தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது