அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது…. ஜமாத் உத்தர்வால் பரிதவிக்கும் 18 குடும்பங்கள்….!

By manimegalai a  |  First Published Sep 22, 2021, 2:16 PM IST

அவங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்…அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது… மீறினா அவங்களையும் ஒதுக்கிவைப்போம்…. இதுபோன்ற வசனங்கள் பழைய படங்களில் மட்டுமே பார்த்தவர்களுக்கு மயிலாடுதுரை அருகே கண்முன்னே நடத்திக் காட்டியுள்ளனர்.


அவங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன்…அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது… மீறினா அவங்களையும் ஒதுக்கிவைப்போம்…. இதுபோன்ற வசனங்கள் பழைய படங்களில் மட்டுமே பார்த்தவர்களுக்கு மயிலாடுதுரை அருகே கண்முன்னே நடத்திக் காட்டியுள்ளனர்.

 

Latest Videos

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட எலந்தங்குடி கிராமத்தில் எராளமனா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 18 குடும்பங்களை ஊரை விட்டே ஒதுக்கிவைத்துள்ள ஜமாத்தார், அவர்களுடன் யாரும் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். பாங்கு சொல்ல பயன்படும் மசூதி ஒலிபெருக்கியில் இதற்கான அறிவிப்பை ஜமாத் நிர்வாகம் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜமாத் உத்தரவால் பாதிக்கப்பட்ட அப்துல் வக்கீல், சம்சுதீன், ஜலாலுதீன், முகமது பரூக் ஆகிய நால்வரது குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட 18 குடும்பத்தவர்களுடன் மற்றவர்கள் பேசக் கூடாது, கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது, யாரும் வாடகைக்கு குடி அமர்த்தவோ, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கவோ அனுமதி கிடையது. 18 குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக் கூடாது என்ற் ஜமாத் நிர்வாகம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜமாத் நிர்வாகம் இத்தகையை முடிவை எடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வக்பு வாரிய சட்ட திட்டங்களுக்கு முரணாக நடந்துகொள்ளும் ஜமாத் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

click me!