குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சை SP.. மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சிபிஐ முன்னாள் இயக்குநர்.!

By vinoth kumarFirst Published Jan 23, 2022, 2:06 PM IST
Highlights

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகம்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மாணவி இறப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சை எஸ்பி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகம்பாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடக்கத்தில் வெகு சாதாரணமாக அறியப்பட்ட இந்த சம்பவம் இப்போது தேசிய அளவில் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. 

பள்ளி மாணவி மத மாற்ற முயற்சியினாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மாணவி மரண வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால்,  மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல என  தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவுளிபிரியா விளக்கம் அளித்துள்ளார். மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு நேற்று தஞ்சையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனையடுத்து, பள்ளி மீது நடவடிக்கை கட்டாயம் தேவை என்று மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும், மறு பிரேத பரிசோதனைக்கு அவசியம் இல்லை என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, மாணவியின் உடல் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூறியது போன்று உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சி.ஐ.டி. அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாணவி இறப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சை எஸ்பி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  இந்த வழக்கை சி.ஐ.டி. அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

click me!