மின்சார கம்பியை மிதித்த மருமகள் .. காப்பாற்ற சென்ற மாமியாரும் சேர்ந்து பலியான சோகம் .. உயிர் தப்பிய பிஞ்சு குழந்தைகள் ..

By Asianet Tamil  |  First Published Aug 20, 2019, 1:34 PM IST

மின்சார கம்பியை மிதித்த மருமகளை காப்பாற்ற சென்ற மாமியாரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
 


சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மனைவி சரண்யா . இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும் , 8 மாதத்தில் பெண் குழந்தையும் இருக்கிறது . லட்சுமணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் . லட்சுமணன் தாயார் தெய்வானை  , சரண்யாவிற்கு துணையாக அவர் வீட்டில் வசித்து வருகிறார் .

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது . சரண்யா வீட்டின் பின்புறம் ஒரு மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது . இதனை அறியாத சரண்யா , மழை நேரத்தில் அதனை மிதித்து விட்டார் . இதனால் மின்சாரம் தாக்கி அலறியுள்ளார் .

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து தெய்வானை வெளியே வந்துள்ளார் . காப்பாற்றுவதற்கு அருகே சென்ற போது அவரையும் மின்சாரம் தாக்கி இருக்கிறது . இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் .

அருகில் நின்ற குழந்தைகளுக்கு சிறு காயம் ஏற்பட்டது . அவர்களை அருகில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

click me!