
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாச்சி குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா(வயது 25), சுபாஷ்(23). இவர்கள் இருவர் மீதும் சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சுமார் கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருச்சியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தவறி விழுந்து உயிரிழப்பு? போலீஸ் விசாரணை
இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணைப் பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இரு வரையும் 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து காளையார் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன் காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையே இக்கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர்(23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த வாணிகருப்பு மனைவி மதுமதி(26), சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ்(23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி(21), யுவராஜ்(22), அருண்குமார்(30), ஒக்கூர் அபினேஷ்(22) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.