சேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..!

By vinoth kumar  |  First Published May 24, 2020, 4:41 PM IST

சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே இன்று திருமணமாண மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 


சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே இன்று திருமணமாண மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கெங்கவல்லியைச் சேர்ந்த 28 வயதான உறவினருக்கும் இன்று திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சென்னையில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்தனர். அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனைச் சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் திருமணம் முடிந்ததும் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், சமூக இடைவெளியில் 5 பேருடன் திருமணம் நடத்திக் கொள்ளவும், அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி இன்றுகாலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அவர் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டார். 

click me!