ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் தொற்றின் வேகம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 28,978 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,09,237ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் நேற்று மட்டும் 232 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,880ஆக அதிகரித்துள்ளது.
undefined
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் முன்களப்பணியாளர்கள், அரசு அதிகாரிகள் தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.