அப்துல் கலாம் சகோதரர் உடல் நல்லடக்கம்... அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 08, 2021, 12:52 PM IST
அப்துல் கலாம் சகோதரர் உடல் நல்லடக்கம்... அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்...!

சுருக்கம்

இன்று காலை 11 மணி அளவில் முகமது முத்து மீரான் மரைக்காயரின் உடல் அவர் வசித்து வந்த பகுதிக்கு அருகிலேயே முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர். 
மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி தன்னுடைய 104வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாகவே முகமது முத்து மீரான் மரைக்காயர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். 

இன்று காலை 11 மணி அளவில் முகமது முத்து மீரான் மரைக்காயரின் உடல் அவர் வசித்து வந்த பகுதிக்கு அருகிலேயே முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தினர். 

PREV
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!