ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் அதிக திறன் உள்ள பைக்குகளில் மின்னல் வேகத்தில் ஏராளமான இளைஞர்கள் செல்வது விபத்து ஏற்படுத்துவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
பரக்குடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் அதிக திறன் உள்ள பைக்குகளில் மின்னல் வேகத்தில் ஏராளமான இளைஞர்கள் செல்வது விபத்து ஏற்படுத்துவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடி நகரில் தேவேந்திரர் பண்பாட்டு கழக திருமண மண்டப பகுதியில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் ரேஸ் பைக்கில் அதிக வேகமாக சென்ற போது எதிரில் விதிமுறைகளை மீறி அதே பக்கம் மற்றொரு இளைஞர் வந்த பைக்குடன் மோதியது.
இதையும் படிங்க;- வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- விடாமல் உயிர் பலி கேட்கும் ஆன்லைன் ரம்மி.. பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!