தோல்வி பயத்தால் நைசாக ஒதுங்கிய திமுக, அதிமுக? கெத்தாக போட்டியில்லாமல் வெற்றியை தட்டித்தூக்கிய பாஜக.!

By vinoth kumarFirst Published Feb 8, 2022, 6:31 AM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜகவை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் போட்டியிடாததால் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜகவை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் போட்டியிடாததால் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். ஆளுங்கட்சியான திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆகையால், முன் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே, பல்வேறு இடங்களில் போட்டியில்லாமல் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையில் அனைவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கமுதி பேரூராட்சியில் அரசியல் கட்சிகளை விட சுயேச்சைகள் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக -2, பாஜக - 6, திமுக -8, கம்யூனிஸ்ட் - 1 வார்டுகளில் களம் காண்கின்றன. இதில், 14வது வார்டில் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜாவை எதிர்த்து அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

அந்த வார்டில் சுயேச்சைகள் யாரும் பாஜகவை எதிர்த்து போட்டியிடாததால் சத்யா ஜோதிராஜா போட்டியின்று வெற்றி பெற்றுள்ளார். இதனை பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி  சத்யா ஜோதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டில் 10 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வகியுள்ளனர். 14வது வார்டில் பாஜக போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!