பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியதாலே மணிகண்டன் உயிரிழப்பு? அவரது சகோதரர் கூறும் பகீர் தகவல்..!

By vinoth kumar  |  First Published Dec 8, 2021, 11:14 AM IST

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணக்குமார். இவரது மகன் மணிகண்டன்(21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீசார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, மணிகண்டனை போலீசார் விரட்டிச் பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் அன்று இரவு மணிகண்டனின் தாயாரை வரவழைத்துஅவரை கண்டித்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு 3 முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லபடுகிறது. மேலும் அவரது பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீசார் கொடூரமாக தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உடலை மறுபிரேத பரிசோதனை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்;- வாகன சோதனையின் போது அபராதம் விதித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அண்ணன் சென்றபோது போலீசார் அவரை மடக்கி படித்து போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவன் என்றும் கூறியும் விடாமல் அடித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, இரவு காவல் நிலையத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், உங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து செல்லும் படி போலீசார் கூறியுள்ளனர். 

இதனையடுத்து, போலீசார் கையெழுத்து வாங்கி கொண்டு காவல் நிலையத்தில் இருந்து மணிகண்டனை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து சென்றோம். வீட்டிற்கு வந்த பிறகு போலீசார் இரும்புக் கம்பியால முதுகு, வயிறு, மர்ம உறுப்புல அடிச்சதையும்  கூறி தாயிடம் கதறி அழுதுள்ளார். இரவு நேரம் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால் காலையில் அழைத்து செல்லலாம் என்பதாலல் ஆறுதல் கூறி வைத்தோம். திடீரென நள்ளிரவில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் கண்ணீர் கூறியுள்ளனர். 

click me!