மளமளவென எரிந்த தீயில் கருகிய 25 ஆடுகள்..! கண்ணீர்விட்டு கதறிய உரிமையாளர்..!

By Manikandan S R S  |  First Published Mar 10, 2020, 12:27 PM IST

குடிசை முழுவதும் பற்றி எரியவே வெப்பம் தாளாமல் ஆட்டு குட்டிகள் அலறியுள்ளன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக தீயில் கருகி 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இருக்கிறது மயிலாடுவயல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காளிமுத்து, இவரது மகன்கள் நாகூரான் மற்றும் முருகேசன். இருவரும் கிராமத்தில் ஆட்டுப்பண்ணை அமைத்து தொழில் பார்த்து வருகின்றனர். அதில் சுமார் 200 ஆடுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல லட்சங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தினமும் ஆடுகளை அங்கிருக்கும் காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

Tap to resize

Latest Videos

undefined

நேற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்பட்டன. குட்டிகளை ஓலைகளால் வேயப்பட்ட குடிசையில் அடைத்து விட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு உரிமையாளர் கொண்டு சென்றுள்ளார். இந்தநிலையில் ஆட்டுப்பண்ணை அமைக்கப்பட்டிருந்த வயல்நிலங்களில் கிடந்த வைக்கோல்களில் தீ பற்றியுள்ளது. காற்றின் வேகத்தால் மளமளவென பரவிய தீ ஆட்டு குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த குடிசையில் பற்றியுள்ளது.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

குடிசை முழுவதும் பற்றி எரியவே வெப்பம் தாளாமல் ஆட்டு குட்டிகள் அலறியுள்ளன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக தீயில் கருகி 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஆடுகள் பலியானதை கண்டு உரிமையாளரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனாவிடம் தப்ப கள்ளச்சாராயம் குடித்த மக்கள்..! 27 பேர் துடிதுடித்து பலி..!

click me!