'இதுதான் என்னைக் கடிச்ச கட்டுவிரியன்'..! கடித்த பாம்பை கையோடு பிடித்து வந்த தொழிலாளி..!

By Manikandan S R S  |  First Published Feb 22, 2020, 3:35 PM IST

சேதுவின் வீட்டு வாசலில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. இரையாக எலியை விழுங்கியிருந்த பாம்பு, நகர முடியாமல் இருந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சேது, பாம்பு மயங்கியிருப்பதாக நினைத்து தனது கையால் பிடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். 


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேது. அந்தப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகே ஏராளமான முட்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தநிலையில் சேதுவின் வீட்டு வாசலில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. இரையாக எலியை விழுங்கியிருந்த பாம்பு, நகர முடியாமல் இருந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சேது, பாம்பு மயங்கியிருப்பதாக நினைத்து தனது கையால் பிடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். 

Latest Videos

undefined

அப்போது கட்டுவிரியன் பாம்பு சேதுவின் கையை சுற்றிக்கொண்டது. பயந்து போன சேது, பாம்பை விடுவிக்க முயன்றபோது அது அவரை கடித்தது. உடனடியாக அவர் கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். சேதுவை மீட்ட அவர்கள் பாம்பை அடித்துக்கொன்றனர். பின் சேதுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உடனே சேது உயிரிழந்து கிடந்த பாம்பை கையிலெடுத்து ஒரு பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சேதுவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்ன பாம்பு தீண்டியது? என கேட்டுள்ளனர்.

ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

அந்தநேரத்தில் பையில் இருந்த கட்டுவிரியன் பாம்பை எடுத்து அவர் மருத்துவர்களிடம் காட்டியுள்ளார். அதைக்கண்டு மருத்துவர்களும் சக நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பாம்பு உயிருடன் இல்லை என்பதை சேது தெரிவித்த பிறகே அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து சேதுவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டிய அவசியமில்லை எனவும், என்ன பாம்பு கடித்தது என்பதை தெரிவித்தால் போதும் என விளக்கினர்.

நோயாளி ஒருவர் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!