நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 1500 பேர் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்து மீனவர்களை மிரட்டினர்.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைகடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கைது நடவடிக்கை தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
undefined
நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 1500 பேர் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்து மீனவர்களை மிரட்டினர். அந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று மீனவர்களை கண்டித்த அவர்கள், அங்கிருந்து விரட்டியடிக்கவும் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மேலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக தமிழக மீனவர்கள் 11 பேரை அதிரடியாக கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்ல பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்துமீறலில் ஈடுபட்டிருக்கும் இலங்கையை கண்டித்து கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசை வற்புறுத்தி இருக்கின்றனர்.
Also Read: இறந்தும் 6 பேரை வாழ வைத்த சுரேஷ்..! உணர்ச்சிப் பெருக்கில் உறவினர்கள்..!.