ராமநாதபுரத்தில் அதிர்ச்சி: இன்று ஒரே நாளில் உச்சபட்ச கொரோனா பாதிப்பு

By karthikeyan V  |  First Published Jun 25, 2020, 7:55 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 3509 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1834 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் 47650ஆக உள்ளது பாதிப்பு எண்ணிக்கை. 

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தொடர்ச்சியாக பாதிப்பு அதிகமாக பரவிவந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் தான் இருந்தன. ஆனால் சென்னையில் மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். 

அப்படி சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று உறுதியாகிவருகிறது. அதனால் கடந்த ஒரு வாரமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. 

ஆனால் கடந்த சில தினங்களாக மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது.  இன்று ஒரே நாளில் ராமநாதபுரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 140 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 474ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பாதிப்பு பதிவானது மதுரையில் தான். மதுரையில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 191 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 170 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 172 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது. 
 

click me!