கொரோனா டியூட்டி..! 250 கிலோமீட்டர் பயணம்..! செவிலியவர் வேலைக்கு ஆர்வமுடன் வந்த நிறைமாத கர்ப்பிணி..!

By Manikandan S R S  |  First Published Apr 4, 2020, 8:29 AM IST

தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ரயில், பேருந்து போன்ற அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து திருச்சிக்கு 250 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வினோதினி எப்படி பயணம்செய்து மருத்துவமனையை அடைவது என அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் குழப்பத்தில் இருந்தனர்.


ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வினோதினி இவருக்கு திருமணம் முடிந்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் வினோதினி செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் அரசு பணிக்கு எடுக்கப்பட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் வினோதினியையும் கொரோனா சிகிச்சைக்காக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமித்தது. பணி நியமன ஆணை அண்மையில் வினோதினிக்கு அனுப்பப்பட்டு ராமநாதபுரத்தில் வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் திருச்சியில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ரயில், பேருந்து போன்ற அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து திருச்சிக்கு 250 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வினோதினி எப்படி பயணம்செய்து மருத்துவமனையை அடைவது என அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

கொடூர கொரோனாவின் முடிவு காலம் நெருங்கி விட்டது..! நம்பிக்கை தரும் நோபல் பெரிசு பெற்ற விஞ்ஞானி..!

இதுகுறித்து தகவல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சென்று இருக்கிறது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அவர் உடனடியாக  மாவட்ட ஆட்சியர் மூலமாக வினோதினிக்கு பயணம் செய்வதற்கான அனுமதி பாஸ் வாங்கிக்கொடுத்தார் இதையடுத்து வாடகைக்கு கார் அமர்த்தப்பட்டு 250 கிலோ மீட்டர் பயணம் செய்து வினோதினி கொரோனா சிகிச்சை பணியில் செவிலியராக இணைந்திருக்கிறார்.

click me!