ஒரே நாளில் ரூ.110 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல்; இனியும் தூங்காதீர்கள் - திமுகவுக்கு அண்ணாமலை அறிவுரை

By Velmurugan s  |  First Published Mar 11, 2024, 4:30 PM IST

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த திமுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது. 

இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கோலாட்டம்; 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று அசத்தல் நடனம்

இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம். 

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தங்குதடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, தற்போது சோதனைகளில் பிடிபடும் போதைப்பொருள்களின் அதிகபட்ச அளவு காட்டுகிறது. 

வாய் நிறைய பேசினால் மட்டும் போதுமா? காவல் துறை மரணங்களை கட்டுப்படுத்தாமல் மூடி மறைப்பது தான் திராவிட மாடலா? சீமான் கேள்வி

போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும், எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்தில் இருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!