Latest Videos

Viral Video: தண்ணீர் பாம்பை கொன்று யூடியூபில் பீலா விட்ட வாலிபர்; வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை

By Velmurugan sFirst Published Jun 8, 2024, 6:12 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்த தண்ணீர் பாம்பை அடித்து கொன்றுவிட்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்த நபரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மலையாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் மெய்ஞான செந்தில்குமார்(வயது 28). இவர் சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராமில் உள்ளிட்டவற்றில் ரொம்ப பெருமையா இருக்கு என்ற பெயரில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி இரவு பாம்பு ஒன்று அவரது ஊருக்குள் நுழைந்ததாகக் கூறி அந்தப் பாம்பை கட்டையால் அடித்து கொன்றுள்ளார். மேலும் அந்த பாம்பு கட்டுவிரியன் பாம்பு என்று கூறி வீடியோ எடுத்து அவரின் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நேற்று மாலை இதனை அறிந்த கீரனூர் சரக வனத்துறை அதிகாரியான பொன்னம்மாள்  தலைமையிலான வனத்துறையினர் மெய்ஞான செந்தில்குமாரிடம் இது குறித்து விசாரித்துள்னர். 

சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் வரிசையில் அதிமுகவில் புதிய அணி; தொடர்ந்து பலவீனமடையும் ஓபிஎஸ் டீம்

அப்பொது, அவர் பாம்பை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து மெய்ஞான செந்தில்குமார் அடித்துக் கொன்றது விஷமில்லா தண்ணீர் பாம்பு என்று தெரிவித்ததோடு அந்த விஷமில்லா தண்ணீர் பாம்பை அடித்து கொன்று வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட குற்றத்திற்காக வனத்துறையின் வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமாரை கைது செய்து விராலிமலை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 

தென்காசியில் காவல்நிலைய எழுத்தர் வெட்டி படுகொலை; சினிமா பாணியில் நடைபெற்ற கொலையால் பொதுமக்கள் அச்சம்

பின்னர் நீதிபதி அவரை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மெய்ஞான செந்தில்குமாரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!