புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சாத்தாயி என்ற 75 வயது மூதாட்டி நேற்று மாலை அதே கிராமத்தில் உள்ள கோட்டாகுளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மூதாட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
24 மணி நேரம் தான் அவகாசம்; பழனியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கெடு விதித்த நீதிமன்றம்
undefined
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நாகுடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின் குற்றவாளியை கைது செய்ய தனிப்படையையும் அவர் அமைத்திருந்தார்.
அதன் பின் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த முகாஸ்ரின்(25) என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அதன் பின் நகையை வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளியை கைது செய்த காவல் துறையினர், அவர் வைத்திருந்த 5 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.