100 அரசு பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் இலவசமாக லேப்டாப் தரப்போகிறேன்... பாரிவேந்தர் அதிரடி

By sathish k  |  First Published Sep 3, 2019, 4:19 PM IST

பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் உள்ள உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.


பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் உள்ள உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், உடலும் உள்ளமும் வலிமையாக இருந்தால் தான் விளையாட்டில் சாதிக்க முடியும். கிராமத்தில் தான் உழைப்பும் சக்தியும் இருக்கிறது என்றார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சீனா ஜப்பான், மக்கள் தங்கள் உடல் நலன்களை பாதுகாத்து வருகின்றனர். அதனால் தான் அவர்கள் ஆயுள்காலம் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் உள்ள 100 அரசு பள்ளிகளுக்கு எனது சொந்த செலவில் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் எனக் கூறினார்.

கடைசியாக, அரியலூரில் இருந்தது பெரம்பலூர், துறையூர் வழியாக ரயில்சேவை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன். மேலும், காவிரி, கங்கை, குண்டாறு இணைப்பு திட்டம் பற்றி மக்களவையில் வலிறுத்தி உள்ளேன், இது குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார். 

click me!