தமிழகத்தில் மீண்டும் சூரியகிரகணம் 12 வருடங்கள் கழித்து 2031 ல் தான் தோன்றும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை பூமியில் இருந்து காணமுடியாதபடி மறைக்கிறது. அதையே சூரியகிரகணம் என்கின்றனர். இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதை காண்பதற்கு மக்கள் பலர் ஆர்வமுடன் இருந்தனர்.
காலை 8.08 மணியில் சூரியனை சிறுது சிறிதாக சந்திரன் மறைக்க தொடங்கியது. சரியாக 9 35 இல் இருந்து 3 நிமிடங்களுக்கு சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைக்கும் நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சூரியனின் நடுப்பகுதியை சந்திரன் மறைக்க தொடங்கியது. அதனால் சூரியனை சுற்றி நெருப்பு வடிவில் வளையம் ஒன்று தோன்றியது. அதுவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. பின் சூரியனை விட்டு மெல்ல மெல்ல விலகிய சந்திரன். சரியாக 11.19 மணியளவில் முழுமையாக விலகியது. அதன் பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த இந்த அதிசய சூரிய கிரகணம், தமிழகத்தில் ஓரளவிற்கு நன்றாக தெரிந்தது. சென்னை, மதுரை, கரூர்,திருச்சி ஊட்டி,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. மக்கள் சூரியகிரகணத்தை காண்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடுத்த சூரிய கிரகணம் 2020 ஜூன் 21 ல் ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் நிகழும். தமிழகத்தில் இனி 12 ஆண்டுகள் கழித்து 2031 ல் தான் சூரிய கிரகணம் தெரியும்.