கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை யூடியூபர் சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார்.
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளை பதிவு செய்தமைக்காக யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் தனியார் விடுதியில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நேர்காணலை ஒளிபரப்பு செய்த யூடியூப் நிறுவனத்தின் ஆசிரியரும் கைது செய்யப்பட்டார். இருவரும் வெவ்வே இடங்களில் வெவ்வேறு நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
undefined
மேலும் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி அமைப்பினர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். நீதிபதி தமக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால் தனது ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதை உணர்ந்த சவுக்கு சங்கர் முன்கூட்டிய மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.