கைலாசா நாட்டில் ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையின் பிரபல டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார் நித்தியானந்தாவிற்கு அதிரடி கோரிக்கை வைத்துள்ளார்.
கைலாசா நாட்டில் ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையின் பிரபல டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார் நித்தியானந்தாவிற்கு அதிரடி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர், அதில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். நேற்று கூட விநாயகர் சதுர்த்தி என்பதால், கைலாசா நாட்டின் 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்.
இந்த நாணயங்கள் எங்கெங்கு செல்லும் என்கிற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாத நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல்வேறு கிளைகளை வைத்துள்ள மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில், கைலாச நாட்டில் தனது ஹோட்டலின் கிளையை நிறுவுவதற்கு நித்யானந்தா அனுமதி தரவேண்டும். உங்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.