ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்; அரசியலாக்கக் கூடாது - அலங்காநல்லூரில் 2ம் பரிசு பெற்ற வீரர் கருத்து

By Velmurugan s  |  First Published Jan 20, 2024, 10:27 AM IST

ஜல்லிக்கட்டை  விளையாட்டாக பார்க்க வேண்டும் அரசியல் ஆக்க கூடாது  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிகப்பட்ட மாடு பிடி வீரர் அபி சித்தர் பேட்டி.


உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  கடந்த 17ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 18 காளைகளைப் பிடித்து கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்ததாகவும், 17 காளைகளை பிடித்து சிவகங்கையைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடம் பிடித்ததாகும் கமிட்டி அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த அபி சித்தர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என புகார் மனு அளித்த அபி சித்தர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாகவும். முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு மூன்று சுற்றுகள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்துகள் கொண்டாடுவதை தடுப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

மேலும் கமிட்டியிடம் நான் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எனவே இதுகுறித்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறேன் என்றார். மேலும் வீடியோ பதிவுகளை பார்த்து இறுதிச்சுற்றில் மாடுகள் பிடிக்கப்பட்டதை எண்ணினால் யார் வெற்றி பெற்றார் என தெரியவரும். விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன்.

கேலோ இந்தியா விழா.. மேடைக்கு சென்றபோது தடுமாறிய முதல்வர் ஸ்டாலின்.. கைத்தாங்கலாக பிடித்துக்கொண்ட பிரதமர் மோடி!

மாவட்ட ஆட்சியர் சங்கீதா தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். அரசியல் ஆக்க கூடாது. வரும் 24ம் தேதி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வருகை தரும் தமிழக முதல்வரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

click me!