ஷேர் ஆட்டோ பணிகளின் கவனத்திற்கு; மதுரையில் பெண் பயணியிடம் நகை பறிப்பு - ஓட்டுநர் கைது

Published : Jun 12, 2023, 09:31 AM IST
ஷேர் ஆட்டோ பணிகளின் கவனத்திற்கு; மதுரையில் பெண் பயணியிடம் நகை பறிப்பு - ஓட்டுநர் கைது

சுருக்கம்

மதுரை மாவட்டத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரிபானா பாத்திமா என்ற இளம் பெண்  மதுரையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ரிபானா தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக மேலூர் பைபாஸ் சாலை, கருப்பசாமி கோவில் வழியாக வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். 

சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ ஓட்டுநரும், சக பயணி போன்று ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநரின் கூட்டாளிகள் இருவரும் பாத்திமாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் இரு மோதிரங்கள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

கோவையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்

இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு இடம்பெயர்ந்த அரிகொம்பன்; அச்சத்தில் மக்கள் - அதிகாரிகள் விளக்கம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!