ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்ட வனவர்கள் நாட்டுத்துப்பாக்கியுடன் சென்ற இருவரை பின்தொடர்ந்ததில், பயந்து ஓடியவர்களில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் சோதனை சாவடிக்கு தீ வைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த ஒகேனக்கல் சாலை, அட்டப்பள்ளம் என்னும் கிராம பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் நாற்றம்பாளையம் புதூர் பீட்டை சேர்ந்த வனக்காப்பாளர்கள் சின்னசாமி, சசிகுமார் மற்றும் 3 வேட்டைதடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் செல்வதை பார்த்து பின்தொடர்ந்தனர். வன அதிகாரிகள் பின் தொடர்வதை அறிந்த இருவரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர். அப்போது வெங்கடேஷ்(வயது 48) என்பவர் புதரில் மறைந்துக்கொண்ட நிலையில், அவரை வனத்துறையினர் பார்த்து அழைத்த போது வேகமாக ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார்.
கணவருடன் சேர்த்து வையுங்கள்; காவல் நிலையம் அருகே தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் பரபரப்பு
பின்னர் மூச்சுவிட சிரமப்பட்டு குடிநீர் கேட்டதாகவும், பின்னர் 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்க முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அட்டபள்ளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது உறவினர்கள் வனத்துறை சோதனைசாவடிக்கு தீ வைத்ததுடன், சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தவிக்கும் முயற்சியாக அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் ஆசையாக குடித்த மாம்பழ ஜூஸ் பாக்கெட்டில் எலி; அதிர்ச்சியில் பெற்றோர்