தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இடைபையூர் அருகே இருவரும் வந்தபோது சாலையின் குறுக்கே தெருநாய் ஒன்று ஓடியிருக்கிறது. அதன் மீது ஏறியதில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி தாறுமாறாக சென்று அங்கிருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செவிலியர்கள் குமுதா, பாலாமணி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி குமுதா(39). இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி(44). இவர்கள் இரண்டு பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தனர். தினமும் இருசக்கர வாகனம் ஒன்றில் இருவரும் பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இரண்டு பேரும் பணியில் இருந்தனர். பணி முடிந்த பிறகு வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இடைபையூர் அருகே இருவரும் வந்தபோது சாலையின் குறுக்கே தெருநாய் ஒன்று ஓடியிருக்கிறது. அதன் மீது ஏறியதில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி தாறுமாறாக சென்று அங்கிருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செவிலியர்கள் குமுதா, பாலாமணி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செவிலியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் குமுதா மரணமடைந்தார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாலாமணி தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய செவிலியர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.