உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி..! ஆத்திரத்தில் 20 வயது இளைஞர் செய்த பகீர் காரியம்..!

By Manikandan S R S  |  First Published Feb 17, 2020, 4:13 PM IST

அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்று அவருடன் பிரபாகர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் பிரபாகர் மீது நிருபாவிற்கு வெறுப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து தன்னுடன் உறவு கொள்வதை தவிர்க்குமாறு நிருபா பிரபாகரிடம் கூறியிருக்கிறார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே இருக்கிறது குடிசாதனப்பள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நிருபா(29). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சனை முற்றிவிடவே மனவேதனை அடைந்த சீனிவாசன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் நிருபா அதே வீட்டில் குழந்தையுடன் தனிமையில் வசித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

நிருபா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர்(20). இவருக்கும் நிருபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருங்கி பழகிய இவர்கள் நாளடைவில் கள்ளகாதலர்களாக மாறியுள்ளனர். அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்று அவருடன் பிரபாகர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் பிரபாகர் மீது நிருபாவிற்கு வெறுப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து தன்னுடன் உறவு கொள்வதை தவிர்க்குமாறு நிருபா பிரபாகரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அதை மறுத்த பிரபாகர், தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் நிருபா வீட்டிற்கு பிரபாகர் செல்லவே இருவரிடையும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகர் நிருபாவை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவலர்கள் பிரபாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கள்ளக்காதலி வீட்டிலேயே வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

click me!