இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய லாரி..! தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலியான தம்பதி..!

By Manikandan S R S  |  First Published Jan 31, 2020, 12:44 PM IST

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 


கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணா(45). இவரது மனைவி சந்தோஷா(38). இவர்களின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி தொழில் பார்த்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் முனிகிருஷ்ணாவின் உறவினர் ஒரு புதியதாக வீடு கட்டியிருக்கிறார். அதன் கிரகப்பிரவேச நிகழ்விற்கு முனிகிருஷ்ணா அழைக்கப்பட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அதில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முனிகிருஷ்ணா மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். ஓசூர் அருகே வந்த போது அதே சாலையின் எதிரே டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதிவேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முனிகிருஷ்ணாவின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சந்தோஷா, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

படுகாயங்களுடன் முனிகிருஷ்ணா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கஞ்சாவுக்கு அடிமையான கடைசி மகன்..! ஆத்திரத்தின் உச்சியில் கொடூரமாக கொன்ற தாய்..!

click me!