3 வயது குழந்தை மீது ஏறி இறங்கிய பள்ளி வாகனம்..! உடல் நசுங்கி பரிதாப பலி..!

By Manikandan S R S  |  First Published Jan 26, 2020, 2:06 PM IST

நிலைதவறி கீழே விழுந்த குழந்தை மீது பள்ளி வாகனம் ஏறி இறங்கியது. அதில் பலத்த காயமடைந்த குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே இருக்கிறது கரடிஹள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மூன்று வயது குழந்தை குருப்ரசாத். வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறான். வேடியப்பனின் உறவினர் வீடு அருகே இருக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் சிறுமியுடன் குருப்ரசாத் தினமும் விளையாடுவது வழக்கம்.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று சிறுமி பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி வாகனத்திற்கு காத்திருந்துள்ளார். அப்போது குருப்ரசாத் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பின் வாகனம் வந்ததும் குருப்ரசாத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு சிறுமி வாகனத்தில் ஏறியிருக்கிறார். குழந்தை குருபிரசாந்தும் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளான். ஆனால் அதை சிறுமி கவனிக்கவில்லை. குழந்தை வாகனத்தில் ஏறுவதை அறியாத ஓட்டுநர் பேருந்தை இயக்கி இருக்கிறார். 

நிலைதவறி கீழே விழுந்த குழந்தை மீது பள்ளி வாகனம் ஏறி இறங்கியது. அதில் பலத்த காயமடைந்த குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தை உயிரிழந்து கிடந்தது கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read:குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்..! பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..!

click me!