மிச்சம் இருந்த ஒரேயொரு மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. தமிழ்நாடு ஃபுல்லா பரவிய கொரோனா

By karthikeyan V  |  First Published Apr 25, 2020, 9:56 PM IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த ஒரேயொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத மாவட்டம் என்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 
 


தமிழ்நாட்டில் இன்று மாலை நிலவரப்படி, 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1821ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் இதுவரை 960 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 835 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் அதிகபட்சமாக 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் 50%க்கும் அதிகமான பாதிப்பு சென்னையில் தான் உள்ளது. இன்று கூட பாதிப்பு உறுதியான 66 பேரில் 43 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கொங்கு மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. 

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டன. கடந்த 21ம் தேதி ஓசூரில் இருந்து மைசூர் சென்றுவந்த 43 வயது நபர், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு 34 நாட்கள் ஆன நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா அக்கவுண்ட்டை தொடங்கிவிட்டது. 
 

click me!