சீக்கணப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வந்திருந்தார். ஆட்சியரை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழவே, ஆறுதல் கூற வந்த ஆட்சியரும் கண்ணீர்விட்டு அழுதார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கிறது சீக்கணப்பள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சிலர் கர்நாடகாவில் இருக்கும் தர்மஸ்தாலா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்காக ஒரு காரில் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
undefined
நள்ளிரவில் தும்கூர் அருகே இருக்கும் குனிகல் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையில் பயங்கரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 10 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த சிலர் பயணம் செய்தனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.
கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சீக்கணப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வந்திருந்தார். ஆட்சியரை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழவே, ஆறுதல் கூற வந்த ஆட்சியரும் கண்ணீர்விட்டு அழுதார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. பின் பலியானவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.
இதனிடையே சாலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தெலுங்கானா பேரவையில் ஒலித்த தமிழ்..! திருக்குறளை மேற்காட்டிய ஆளுநர் தமிழிசை..!