கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய தலைமையாசிரியர்..? அரசு பள்ளியில் அதிர்ச்சி..!

By Manikandan S R S  |  First Published Mar 4, 2020, 11:47 AM IST

பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையையும் பள்ளி வளாகத்தையும் வெறும் கைகளால் சுத்தம் செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து இவ்வாறு மாணவர்களை தலைமை ஆசிரியர் கொடுமைப்படுத்துவதாகவும் தலைமையாசிரியர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இருக்கிறது மரியாளம் கிராமம். இந்த ஊரில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியராக அன்னை வேளாங்கண்ணி என்பவர் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அவர் மீது பெற்றோர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையையும் பள்ளி வளாகத்தையும் வெறும் கைகளால் சுத்தம் செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து இவ்வாறு மாணவர்களை தலைமை ஆசிரியர் கொடுமைப்படுத்துவதாகவும் தலைமையாசிரியர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனிடையே பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த வித்யா என்கிற மாணவி பள்ளி ஒலிபெருக்கியை திருடிவிட்டதாக கூறி அவரை கண்டித்ததுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக சிறுமியை மிரட்டவும் செய்துள்ளார்.

செல்போன் பேசி தண்டவாளத்தை கடந்த பெண்..! ரயில்மோதி உடல் துண்டு துண்டான பரிதாபம்..!

இதுகுறித்து சிறுமியின் தந்தை சிவா தலைமையாசிரியரிடம் கேட்டபோதும், வித்யா தான் திருடியதாக கூறி கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த சிவாவும் அவரது மகள் வித்யாவும் புகார் மனு தயார் செய்து மற்ற மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று ஓசூர் வருவாய் கோட்டாச்சியரிடம் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து உரிய விசாரணை நடத்த படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாணவர்களின் புகார் குறித்து 2 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

click me!