கபடி விளையாடிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு.! 10ம் வகுப்பு மாணவி சரிந்து விழுந்து உயிரிழப்பு.!

By vinoth kumar  |  First Published Feb 11, 2023, 6:53 AM IST

சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது.  இது போன்ற திடீர் மாரடைப்பு மரணங்களை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


கபடி விளையாடிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது.  இது போன்ற திடீர் மாரடைப்பு மரணங்களை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் காரணமாகத்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளன என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த மாணவி  மயங்கி விழுந்தார். உடனே தண்ணீர் கொடுத்தும் முகத்தில் தெளித்தும் எழுந்திருக்கவில்லை. உடனே ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பள்ளி மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, மாணவிகளும் ஆசிரியர்களும் கதறி அழுதனர். பின்னர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!