பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அங்கு செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்ததன் காரணமாக, அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று பட்டாசு குடோனை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் பட்டாசு குழு மேலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு திடீரென்று பட்டாசுகள் வெடித்தது. இந்த பட்டாசு வெடித்ததில் தனி வருவாய் அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!