
Woman Hacked To Death Inside Kulithalai GH: தமிழ்நாட்டில் அண்மைகாலமாக கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச்சம்பங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
கணவன், மனைவி தகராறு
கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மனைவியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அந்த பெண் குளித்தலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் வெட்டிய கணவர்
இந்த நிலையில் இன்று அதிகாலை மனைவி ஸ்ருதியை பார்ப்பதற்காக விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ருதியின் உடம்பில் சரமாரியாக குத்தி விட்டு அங்குகிருந்து தப்பிச்சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை பார்த்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
காதலித்து திருமணம்
இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய விஷ்ரூத்தினை வலைவீசி தேடி வருகின்றனர். விஷ்ரூத் - ஸ்ருதி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.