அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்! வைரலான வீடியோ! தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

கரூர் அரசு பள்ளியில் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது. தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.

two girl students cleaning toilet! Karur government school HM suspended tvk

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளை கழிவறையை செய்யும் சம்பவம் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் ஒய்ந்தபாடியில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 

Latest Videos

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் எம்.எஸ். சுகானந்தம் விளக்கம் கேட்ட போது தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலரை நேரில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: நாகையில் அதிசய வாழை மரம்! ஐந்து தலை நாக வடிவில் மேல்நோக்கி வளரும் வாழைக்காய்!

அதனை தொடர்ந்து இடத்திற்கு வந்த கல்வி அலுவலர் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது அறிக்கை சமர்ப்பித்தார். இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டார். 

vuukle one pixel image
click me!